காதல் பூக்கள்
த. சீனு (எழுத்தாளர் )
நிலவிலே உன்னை கண்டேன்
உன் நீல கண்களால்
நினைவுகள் கூட மறக்கவில்லை- அது
உன் முகம்தானா என்று
நெஞ்சம் கூட மறப்பதில்லை
அதிலும் நிறைந்து இருக்கிறாய்
மனதில் துள்ளி குதிக்கும்
உன் கண்கள் என்னாடி பெண்ணே !!
பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
என் மனதில் ஈர்க்கும்
குணம் கொண்டவள் நீதானடி!!
என் அர்ப்பணிப்பின் காதல்
நீ தானே பெண்ணே
என்னை அறிந்து சொல்லாடி!
பெண்ணே!!
உன்னில் கண்டேன் -அந்த
உன் உயர்ந்த குணம்
காலமும் கடந்து செல்லும்
உன் புதிர் என்னாடி! பெண்ணே!!
த.சீனு (எழுத்தாளர் )
கருத்துகள்
கருத்துரையிடுக